×

சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்!: 20,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பங்கேற்பு…தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடனடி பணி ஆணை..!!

சேலம்: சேலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 20,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் திரண்டனர். சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள சோனா பொறியியல் கல்லூரி வளாகத்தில் இந்த வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய இந்த முகாமை சேலம் ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். முகாமில் 8ம் வகுப்பு முதல் பொறியியல் பட்டம் வரை பெற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, ஓசூர், கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கியமான சிறந்த 208 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. நண்பகல் வரையில் மொத்தம் 700 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டதாக சோனா கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தெரிவித்தார். இதனிடையே முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக வேலைக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 20,000க்கும் மேற்பட்ட இளைஞர்களும் பட்டதாரி இளம்பெண்களும் குவிந்ததால் கல்லூரி வளாகத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. சென்னை, ஓசூர், கோவை மற்றும் உள்ளிட்ட மாநிலத்தின் சிறந்த 208 தொழில் நிறுவனங்கள் முகாமில் பங்கேற்றன. சேலம் தவிர நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த இளம்பெண்கள், இளைஞர்களும் முகாமில் பங்கேற்றுள்ளனர். …

Tags : Salem District Administration ,Salem ,Sona Engineering College ,Salem 5 Road ,Collector ,Karmegam ,District Employment Office ,District Vocational Guidance Centre ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...